தமிழ் சினிமாவில் இன்றும் சிங்கிள் ஆக இருந்து மன்மத நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.இவர் சிறு வயதில் இருந்தே தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கி பின்பு நடிகர்,பாடகர்,டான்சர் என பல வித்தைகளை காட்டி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
இந்த நிலையில் இன்று பெப்ரவரி 3 ஆம் தேதி 42-வது பிறந்தநாளை கொண்டாடும் சிம்பு,தன்னுடைய அடுத்தடுத்து படங்களின் குறித்த புது அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்க: சாய் பல்லவிக்கு திடீர் உடல்நலக்குறைவு : சினிமாவை விட்டு விலக முடிவு!
அதன்படி அவருடைய 49 வது படம் குறித்த போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கையில் ஒரு இன்ஜினியரிங் புக்குடன் கத்தி இருப்பது போல நிற்கும் போஸ்டரை அறிவித்துள்ளதால்,இப்படத்தில் இவர் ஒரு கல்லூரி மாணவனாக நடிப்பதாக கூறப்படுகிறது.இப்படத்தை இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்,இவர் ஏற்கனவே பார்க்கிங் படத்தை எடுத்து ஹிட் கொடுத்தவர்,தற்போதைக்கு இப்படத்திற்கு STR-49 என பெயரிட்டுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
மேலும் சிம்பு,மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.இதனால் படக்குழு அவருக்கு ஒரு சிறப்பு விடீயோவை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.அதில் கையில் ஒரு துப்பாக்கியுடன்,கண்ணாடி போட்டு அமர்ந்திருப்பது போன்று இருக்கிறது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வருகிறது.
அதுமட்டுமில்லாமல் நடிகர் சிம்பு தன்னுடைய 50 வது படத்தை பற்றி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார்.அதாவது ‘ஆட்மேன் சினி ஆர்ட்ஸ்’ என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் சிம்பு தொடங்கியுள்ளார்.தன்னுடைய 50வது படத்தை இந்த நிறுவனம் மூலம் தயாரித்து,அதில் நடிக்க இருப்பதாக தன்னுடைய X-தளத்தில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் பிறந்தநாளான இன்று,அடுத்தடுத்து அதிரடி அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.