சிம்பு COME BACK.. சிவகார்த்திகேயன் ஷாக் : மாநாடு மாஸ் ஹிட்.. இளம் நடிகர்களுக்கு பறிபோகும் வாய்ப்பு?

Author: Udayachandran RadhaKrishnan
1 December 2021, 12:47 pm
Simbu - Updatenews360
Quick Share

பல நாள் பசியை ஒரு நாள் வெளுத்துக்கட்டிய விதமாக சிம்புவின் மாநாடு படம் அவரது ரசிர்களுக்கு பெரிய ட்ரீட் என்றே சொல்லலாம்.

ஆரம்ப காலத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த சிம்பு, சினிமாவில் சுலபமாகவே நுழைந்து விட்டார். அதற்க காரணம் அவரது தந்தை மற்றும் தாய் சினிமாவில் இருந்ததுதான். டச் இல்லாமல் ஹீரோயின்களுடன் நடிக்கும் ஒரே நடிகர் என்ற பெயர் பெற்றவர் T ராஜேந்தர்.

தங்கை பாசம், காதல், சண்டை, உணர்ச்சிபூர்வமான காட்சிகள் இல்லாமல் இவரது படம் இருக்காது. அப்படி இவர் எடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க ஆரம்பித்தவர் சிம்பு. பின்னர் காதல் அழிவதில்லை என்ற தந்தை இயக்கிய படம் மூலம் ஹீரோவாக கால் பதித்தவர்.

simbu-child - Entertainment Corner

என்னதான் தந்தை கதாநாயகிகளை தொடாமல் இருந்தாரோ, அப்படியே மகன் அவர் மாறாகவே கதாநாயகிகளை தொட்டு தொட்டு நடித்தார். இப்படியே தொடர் படங்களில் நடித்து வந்த சிம்புவுக்கு, தம், கோவில் , குத்து போன்ற படங்கள் கம்ர்ஷியல் படங்களாகவும் ஓரளவு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

Simbu takes off to Thailand with family - DTNext.in

இவரோடி கேரியரில் பெரிய ஹிட் கொடுத்த படமென்றால் அது மன்மதன் படம்தான். சிம்பு கதையை எழுதி நடித்து சிவப்பு ரோஜாக்களை படத்தை உல்டா செய்து எடுத்திருப்பார். படம் பெரிய அளவு ஹிட் கொடுத்தது. மேலும் யுவன் சிம்பு கூட்டணியை ரசிகர்கள் ஆதரித்தனர்.

15 Years of Manmadhan: 15 lesser-known facts about Simbu's blockbuster  ghost-directorial- Cinema express

எப்போதும் கிஸ், Dating என்ற ஒரே பாணியில் இருப்பதால் சிம்பு படம் பெருமளவு ஹிட் கொடுக்காமல் போனது. இதையடுத்து தொட்டி ஜெயா படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் மாஸ் ஹீரோ என நிரூபித்தார்.

ஆனால் வழக்கமான பாணியில் வல்லவன் படத்தில் மீண்டும் திரும்பினார். படத்தில் அந்த மாதிரி காட்சிகள் அதிகம் இருந்ததால் குடும்ப ரசிகர்களை கவர மறந்தது. பின்னர் காளை, சிலம்பாட்டம் என படங்கள் ரிலீஸ் ஆனாலும் ரசிகர்களிடையே ஷோபிக்க முடியாமல் போனது.

How Passionate Kissing Photos Of Simbu & Nayanthara Changed The Destiny Of  Their Relationship - Filmibeat

கவுதம் மேனம் இயக்கத்தில் த்ரிஷாவுடன் நடித்த விண்ணை தாண்டி வருவாயா நல்ல நடிகர் என சிம்புவுக்கு பெயர் எடுத்து கொடுத்தது. பின்னர் வானம் படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஆனால் அந்த படம் தெலுங்கு படத்தின் தழுவல் என்பதால் பெருமளவு வரவேற்பு இல்லை.

இதையடுத்து கமர்ஷியல் படத்தை கொடுக்க எண்ணி ஒஸ்தி என்ற படத்தை கில்லி இயக்குநருடன் சேர்ந்து விருந்தளித்தார். ஆனால் திரையரங்கில் கூட்டம் கூடவில்லை. நல்ல நடிகர் என்பதை தாண்டி சிம்பு மீது பெருமளவு சர்ச்சையே சுற்றி சுற்றி வந்தன. இடையில் நடிகைகளுடன் காதல், ஆபாசமான பாடல் என சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்.

அவருடைய OPEN TALK தான் ப்ளஸ் பாயிண்ட் என சிம்புவை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். ஆனால் யார் கண் பட்டதோ அடி மேல் அடி விழுந்து சிம்புவின் கேரியர் SPOIL ஆனது. இந்த கேப்பில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் சினிமாவில் கால் பதித்தனர்.

சிம்புவுக்கு வந்த படவாய்ப்புகள் கூட புதுமுக நடிகர்களுக்கு பறிபோனது. போடா போடி படத்திற்கு பின் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் சிம்பு வீட்டிலேயே முடங்கினார். இடையில் அவரது மேல் சர்ச்சை மட்டும் விழாமல் இல்லை, சிம்பு நிலையை கண்டு பெற்றோர்களும் கண்கலங்கி பேட்டியளித்தனர்.

கிடப்பில் போடப்பட்ட வாலு படமும் ஒரு வழியாக ரிலீஸ் ஆனது. ஆனால் அதுவும் ஷோபிக்காமல் போக, காதல் முறிந்த பின்னும் நயன்தாராவுடன் மீண்டும் நடித்த சிம்புவின் இது நம்ம ஆளு, தியேட்டர்களை விட்டு சீக்கிரமா வெளியேறியது.

10 Years of 'Vinnaithaandi Varuvaaya': Breaking down the greatness of  'Aaromale' in words - The Hindu

அச்சம் என்பது மடமையடா, அன்பாவன் அசராதவன், அடங்காதவன், செக்க செவந்த வானம் என வருடத்திற்கு ஒரு முறை சிம்புவின் படங்கள் வெளியாகின. நொந்து போன சிம்பு உடல் எடை கூடி வந்தா ராஜவாதான் வருவேன் என்ற படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Vantha Rajavathaan Varuven Movie Review: Simbu fails and drags Sundar C  down with him - Movies News

ஆனால் அந்த படமும் ரிலீஸான ஒரே வாரத்தில் சின்னத்திரையில் வெளியானது. சிம்புவை சினிமா மறந்துவிடுமோ என்ற அச்சம் அவரது ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக இருந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற 'மாநாடு': படக்குழுவினர் தெரிவித்த நன்றி வீடியோ வைரல்!  - தமிழ் News - IndiaGlitz.com

இதன் பின்னர் சிம்பு உடல் எடையை குறைத்து வசீகரமான உடலுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். கொரோனா காரணமாக அந்த படம் ஓடிடியில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் சிம்பு ஒப்பந்தமானது முதல் பல்வேறு தடைகள் வந்தன. ஆனால் அதையெல்லாம் சாப்பிடும் அளவுக்கு ரசிகர்களுக்கு பயங்கர ட்ரீட்டாக மாறியது மட்டுமல்லாமல், அனைத்து தரப்பு மக்களையும் மாநாடு கட்டிப்போட்டது.

சாதனை படைத்த 'மாநாடு… ரசிகர்களுக்கு நன்றி சொன்ன படக்குழு! | Maanaadu Block  buster Hit, Maanaadu Team thanks to audience - Tamil Filmibeat

இனி இவர் தான் மாஸ் என்று சிம்பு ரசிகர்கள் மார் தட்ட ஆரம்பித்துள்ளனர். சிம்புவின் ரீ என்ட்ரியால் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில புதுமுக நடிகர்கள் தற்போது கதிகலங்கியுள்ளனர். இனி புதுமுக நடிகர்களுக்கு வரும் வாய்ப்பு சிம்பு பக்கம் திரும்ப உள்ளதாக கோடம்பாக்கத்தில் தகவல் பரவுகிறது.

மாநாடு' வெற்றி கொண்டாட்டம்: வைரல் புகைப்படங்கள்! - Tamil News -  IndiaGlitz.com

எத்தனை கஷ்டம் வந்தாலும் அதை துடைத்தெறிந்து மீண்டும் நிலைத்து நிற்பது என்பது கடினமான காரியம் என்றாலும் தனது கடின உழைப்பால் ரசிகர்களின் அன்பால் சிம்பு உச்சிக்கொம்புக்கே செல்ல வாய்ப்புள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

Views: - 851

32

1