புகழ் பெற்ற சைக்கோ திரில்லரின் இரண்டாவது பாகத்தில் சிம்பு

4 November 2020, 7:32 pm
Quick Share

சிம்பு கடந்த சில வாரங்களாகவே அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு அளித்து வருகிறார். அந்த வகையில் 20 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடையை குறைத்த அவர், ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இத்திரைப்படம் முடிந்த பிறகு மாநாடு திரைப்படத்தில் மீதி படப்பிடிப்பையும் சிம்பு முடிக்க இருப்பதாக தெரிய வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரது நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் ஆன சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தினை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கவிருப்பதாகவும் தமன் அல்லது சிம்புவே இத்திரைப் படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Views: - 20

0

0