தமிழில் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகி கிடத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் பயணித்து முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் பல விதமான சர்ச்சைகளில் சிக்கி இயக்குனர் விக்கியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது மண்ணாங்கட்டி,ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நயன்தாரா-தனுஷ் ஹாட் டாபிக் வைரலாகி,திரையுலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில் வலைப்பேச்சாளர் அந்தணன் ஒரு பேட்டியில் நயன்தாராவை சரமாரியாக கேள்வி கேட்டு தாக்கி இருப்பார்.
அதில் தனுஷை பற்றி நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே..!ஐயா படத்திற்கு பிறகு சிம்பு மட்டும் வல்லவன் படத்தில் உங்களை அனுமதிக்காமல் இருந்திருந்தால்,நீங்கள் இருந்த இடமே தெரியாமல் போயிருப்பீர்கள்.அந்த படம் தான் உங்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
ஆரம்பகாலகட்டத்தில் உங்களை தூக்கி விட்ட சிம்புவிற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வியும் கேட்டு,நயன்தாரா செய்த ஒரு கேவலமான செயலையும் குறிப்பிட்டிருப்பார்.
அதாவது ஒரு பிரபலமான பொது நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்திருந்தார்.அந்த நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரத்தில் நடிகர் சிம்பு வரப்போவதாக தகவல் வெளியானது.இதை கேட்டவுடன் நயன்தாரா நிகழ்ச்சி அமைப்பாளரிடம் சென்று,”ஒன்று நான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர் இருக்க வேண்டும்” என்று கடிந்து பேசி இருக்கிறார்.
இதை கேட்ட அந்த நிகழ்ச்சி அமைப்பாளர் சிம்புவிடம் நடந்த விசயத்தை போய் சொல்ல,உடனே சிம்புவும்”அவர்களே இருக்கட்டும் நான் கிளம்பிவிடுகிறேன்,இதனால் உங்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை கவலைப்படாதீர்கள்”என்று சொல்லி சென்றிருக்கிறார்.
ஒரு சக மனிதனை இப்பிடி தா அவமானப் படுத்துவீங்களா .நீங்க தனுஷை பற்றி பேச தகுதியே கிடையாது என்று காரசாரமாக பேசி இருப்பார்,அந்தணன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.