“என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும்” – சிம்பு Open Talk !

24 September 2020, 7:24 pm
Quick Share

தமிழ் சினிமால எந்தவொரு நடிகனுக்கும் கிடைக்காத வாய்ப்புகள், யாருக்கும் இல்லாத அளவுக்கு technical knowledgeனு பொறந்ததுல இருந்தே சினிமாக்குள்ள சுத்துற ஒரு ஆளா இருந்தும் ஏன் எதுமே சரியா அமச்சுக்க மாட்றாருனு தெரில.

ஒரு பாடலால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், Dance – னால் ஃபேமஸ் ஆன ஹீரோவை பார்த்து இருப்பீர்கள், படம் மூலியமாக ஃபேமஸ் ஆன ஹீரோவை கூட பார்த்து இருப்பீர்கள், Controversy – னால் ஃபேமஸ் ஆன ஒரே ஹீரோ தலைவன் சிம்பு மட்டுமே.

இந்தநிலையில், ஒரு வழியாக இழு இழு என இழுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க துவங்க, அந்த படம் Lock Down காரணமாக தாமதம் ஆகிறது. கூடிய விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வருகிறது.

தற்போது, இவர் நடித்து வரும் மஹா படத்தின் Producer சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ” சிம்பு 20 கிலோ வரை குறைத்துள்ளார் மன்மதன் படத்தில் பார்த்த சிம்புவை நாம் எதிர்பார்க்கலாம். நான் உடற்பயிற்சி செய்வதை, அவருக்கு புகைப்படங்களை அனுப்புவேன்.

அவர் அதை பார்த்து, என்னுடைய Phone-ல பொண்ணுங்க Photo தான் இருக்கும், ஒரே ஆம்பள Photo உன்னோடது தான் என்று கிண்டலடிப்பார்” என்று வெளிப்படையாக சிம்புவை பற்றி கூறியுள்ளார்.

Views: - 7

0

0