மாஸாக ரீலீஸ் ஆன மாநாடு படத்தின் மாஸ் டீஸர் ! இனி Haters கதறல் இருக்கு !

3 February 2021, 3:22 pm
Quick Share

படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது, கொடுத்த நேரத்தில் படத்தை நடித்து முடிக்காமல் இழுத்தடிப்பது போன்ற கெட்ட பெயர்களை வாங்கிய சிம்பு, ஈஸ்வரன் படத்தை குறுகிய நாட்களில் நடித்து முடித்துக் கொடுத்தார். உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அதுபோக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு மற்றும் பத்துதல படங்களில் கமிட்டாகி சிம்பு நடித்து வருகிறார்.

மாநாடு படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் சிம்பு எஸ் ஜே சூர்யா கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்துள்ளனர். இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தின் டீசர் 5 மொழிகளில் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான டென்ட் படத்தைப் போல பின்னோக்கி ஓடுவது போல் இந்த டீசர் அமைந்துள்ளது.

இந்த படம் அனேகமாக ஒரு சம்பவத்தை திருத்தி எழுதுவது போல் அமைந்திருக்கும் என ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா இசையில் சிம்புவை மீண்டும் பார்ப்பது உச்சகட்ட சந்தோஷத்தை தருவதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் இந்த படத்தின் டீஸர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Views: - 12

0

0