மாநாடு படத்தில் சிம்புவின் மாஸான என்ட்ரி : இணையத்தில் கசிந்த INTRO SCENE… தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2021, 11:04 am
Maanaadu Intro Scene -Updatenews360
Quick Share

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் முதலில் தீபாவளிக்கு வெளியாவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் மாநாடு நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதற்கிடையில் திடீரென நேற்று மாலையில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் மாநாடு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும், வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், உங்களின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. மாநாடு நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்தார்.

இதையடுத்து நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் மாநாடு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்காக நள்ளிரவு முதலே காத்திருந்தனர். இந்நிலையில் காலை 6.45 மணிக்கு முதல் காட்சி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து திரையரங்குகளில் ரசிகர்களின் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு இடையில் மாநாடு திரைப்படம் வெளியானது. படத்தில் சிம்பு தோன்றிய INTRO சீனுக்கு அப்லாஸ் கிடைத்துள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Views: - 252

2

0