மலை போல் காசை குவித்து வைத்திருக்கும் சிம்ரன்.. சொத்து மதிப்பை மனச தேத்திட்டு கேளுங்க..!

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. சிம்ரன் சினிமாவை தாண்டி ஹோட்டல் பிசினஸ் ஒன்றை நடத்தி வருகிறார். Godka by Simran எனும் பெயரில் சிம்ரன் Restaurant நடத்தி வருகிறார்.

இந்த ஹோட்டலில் உணவுகளின் விலை கேட்டால் தலை சுற்றுகிறது. ஒரு ஆம்லெட் விலை மட்டுமே ரூ. 300 இருந்து ஆரம்பித்து சாதாரண கார்லிக் பிரெட்டின் விலை 130, பேபிகார்ன் ரூ. 280, சிக்கன் லாலிபாப் ரூ. 280 என எல்லாமே ஹைக்ளாஸ் பட்ஜெட்டில் தான் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் சைவ உணவும் சேர்ந்த ஒரு தட்டின் விலை ரூ. 1000 ஆகுமாம்.

மேலும் படிக்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் சீண்டல்.. பானுப்ரியாவை பப்ளிக்கா அசிங்கப்படுத்திய இளம் ஹீரோ..!

அதே போல் அனைத்து அசைவ உணவுகள் சேர்ந்த தட்டின் விலை ரூ. 1500 என மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. வறுத்த நண்டு ரூ. 380’ற்கு விற்கப்படுகிறது. இந்த ஹோட்டல் கடற்கரை சாலையில் இருப்பதால் அங்கு வருபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்கள் என்பதால் சாதாரணமாகவே நாள் ஒன்றிற்கு 10 லட்சம் வரை வருமானம் வருமாம். ஆண்டிற்கு கோடி கணக்கில் வருமானம் ஈட்டுகிறார் சிம்ரன்.

சிம்ரன் என்ற பிராண்டிற்காக அந்த ஹோட்டலில் கூட்டமும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நடிகை சிம்ரனின் முழு சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 20 கோடிக்கும் மேல் இருக்குமாம். மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 50 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

Poorni

Recent Posts

எனக்கும் காவ்யா மாறனுக்கும் காதல்? திருமணம் குறித்து முதன்முதலாக வாய் திறந்த அனிருத்!

அனிருத்-காவ்யா மாறன் காதல்? தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தற்போது விஜய்யின் “ஜனநாயகன்”, ரஜினியின் “கூலி”,…

14 minutes ago

ஒரு பிச்சைக்காரனால அரசாங்கமே ரிஸ்க்ல இருக்கு- தனுஷின் “குபேரா” படத்தின் கதை இதுதானா?

வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…

47 minutes ago

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

2 days ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

2 days ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

2 days ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

This website uses cookies.