Breaking – பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு CORONA Positive..!

5 August 2020, 3:44 pm
Quick Share

தமிழ் சினிமாவில் பாடகர்கள் என்று எடுத்தால் அதில் முதன்மையானவர் SPB அவர்கள் தான். இவர் இல்லாமல் ஒரு ரஜினி கமல் விஜய் அஜித் படங்கள் இருக்காது. அந்தளவிற்கு ராசியான பாடகர் தான் SPB. தமிழ், தெலுகு, மலையாளம், ஹிந்தி என ஒரு பெரிய ரவுண்ட் அடித்த பிரபல பாடகர் தான் நம்ம ஊரு SPB. ஏற தாழ 1 லட்சம் பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய மகன் ஆன SPB சரண் கூட பாடகர் தான். தற்போது தயாரிப்பாளராகி அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார். எல்லாம் நல்லா போய்க்கொண்டிருக்கும் நிலையில், SPB அவர்களுக்கு, CORONA தொற்று வந்துள்ளது என செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், “லேசான அறிகுறிகள் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். காய்ச்சல், சளி பிரச்னை குறைந்திருக்கிறது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுவதே நல்லது என்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.