1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த “காதலர் தினம்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் ஃபேவரைட்டான திரைப்படமாகும். ஏ ஆர் ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மரண ஹிட் அடித்தன. அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ரோஜா ரோஜா” என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாகும். இப்பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார். வாலி இப்பாடலை எழுதியிருந்தார்.
இந்த நிலையில் இப்பாடல் மீண்டும் டிரெண்டிங்காகி வருகிறது. அதுவும் வேறு ஒரு இளைஞரின் குரலில். 1999 ஆம் ஆண்டு இளைஞர் ஒருவர் மேடையில் இப்பாடலை பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த குரல் பலரையும் மெய்மறக்க செய்துவிட்டது. இணையத்தில் பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞரின் பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் சிறு வயதில் இருந்தே பாடல்கள் பாடுவதில் திறமை கொண்டவர். மிகப்பெரிய பாடகர் ஆகவேண்டும் என்பதுதான் இவரது லட்சியம்.
அந்த வகையில் “வசூல்ராஜா எம்பிபிஎஸ்” படத்தில் கலக்கப்போவது யாரு, “துப்பாக்கி” படத்தில் குட்டிப்புலி கூட்டம், “கழுகு” படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் போன்ற பல பாடல்களில் இவரது குரல் இடம்பெற்றிருக்கிறது. ஆனால் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
இந்த நிலையில்தான் இவர் 1999 ஆம் ஆண்டு ஒரு இசை கச்சேரியில் “ரோஜா ரோஜா” பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “இந்த வைரல் வீடியோ அவருக்கு இனி வருங்காலத்திலாவது வாய்ப்புகள் பெற்றுத்தரட்டும்” என பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.