அஸ்வின் கையால விருது: கொண்டாடி தீர்த்த ஷிவாங்கி: வைரலாகும் புகைப்படங்கள்!

Author: Udhayakumar Raman
9 March 2021, 5:58 pm
Quick Share

Behindwoods Gold Icons விருது வழங்கும் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஷிவாங்கிக்கு, அஸ்வின் கையால் விருது கிடைத்துள்ளது.

உலகமே வியந்து பார்க்கும் நிகழ்ச்சி எது என்றால், அது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஒரு சமையல் நிகழ்ச்சியை இப்படியொரு காமெடியாக கொடுக்கு முடியும் என்றால் அது விஜய் டிவியால் மட்டுமே முடியும். அதுவும் இந்த நிகழ்ச்சிதான் என்று அண்மையில், நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் – பாலா ஆகியோரது சித்தப்பா – மகன் காம்பினேஷன், ஷிவாங்கி – அஸ்வின் ஆகியோரது லவ் க்ரஷ், ஷிவாங்கி – புகழ் அண்ணன் தங்கை பாசம், ஷகீலா – புகழ் அம்மா – மகன் உறவு முறை, புகழ் – பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா ஆகியோரது லவ் லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தும் அளவிற்கும் இருக்கும்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, தற்போது இந்த நிகழ்ச்சியின் 2ஆவது சீசன் மிகவும் காமெடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், அஸ்வின் மற்றும் ஷிவாங்கி ஆகியோரது கெமிஸ்டரி காம்பினேஷனுக்கு ரசிகர்கள் ஒவ்வொரு வாரமும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். உண்மையில், ஷிவாங்கியே அஸ்வினுடன் க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில், Behindwoods Gold Icons என்ற தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடந்துள்ளது.

இதில், சினிமா, தொலைக்காட்சி, கிரிக்கெட் பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொண்டு விருது பெற்றுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலமாக உலகமே வியந்து பார்த்து பாராட்டும் வகையில் பிரபலமான ஷிவாங்கிக்கு ரியாலிட்டி ஷோவில் அதிக பிரபலமானவர் என்பதற்காக Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது. அதுவும், இந்த விருதை அஸ்வின் வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷிவாங்கி தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் பதிவிட்டு அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: என்னை ஊக்குவித்த ரவூபா (கார்குழல் கண்மணி) மற்றும் மீடியா மசான்ஸ் (வீடியோ கிரியேட்டர்) ஆகியோருக்கு நன்றி. மேலும், சிறந்த பிளாட்பார்ம் மற்றும் வாய்ப்புளை அள்ளிக் கொடுத்த விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி. இறுதியாக அஸ்வினுக்கும் நன்றி. அஸ்வின் கையால் இந்த விருது பெற்றது மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் சந்தித்த அற்புதமான மனிதர்களில் அஸ்வினும் ஒருவர். நீங்கள் மென்மேலும், உயர்வற்கும், நீங்களும் விருது பெற்றதற்கும் எனது வாழ்த்துக்கள்.
இறுதியாக நன்றி மக்களே…

நீங்கள் இல்லாமல் நாங்கள் யாருமே இல்லை. உங்கள் ஆதரவுக்கு ரொம்ப நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது அஸ்வினுடன் இணைந்து ஷிவாங்கி குத்தாட்டம் போட்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலானது.

Views: - 134

6

0