ஜெயம் ரவி வாழ்க்கையை மொத்தமா மூடி கவிழ்த்த சிவகார்த்திகேயன் – பாவம் மனுஷன்!

Author:
2 November 2024, 1:39 pm

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல தோல்வி திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் சறுக்கலில் இருந்து வந்தார். இப்படியான சமயத்தில் நிச்சயம் கட்டாயம் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு முனைப்பில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பிரதர் .

brother movie

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளிவந்தது. ராஜேஷ் டைரக்ஷனில் ஸ்க்ரீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்து வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார் .

இவர்களுடன் எம்.எஸ் பாஸ்கர், பூமிகா, சரண்யா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பேமிலி சென்டிமென்ட் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைத்திருக்கிறார் .

இந்த திரைப்படம் தீபாவளி தினத்தின் ஸ்பெஷல் ஆக வெளிவந்து திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த திரைப்படம் ப்ரோமோஷன் பணிகளில் கோட்டை விட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பின்தங்கி விட்டது.

amaran

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் திரையரங்குகளில் பிரதர் திரைப்படத்திற்கு போட்டியாக வெளிவந்து அனைத்து திரையரங்கங்களையும் ஆக்கிரமித்து விட்டது. ஆம் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆடியன்ஸ்சும் அமரன் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருவதால் மக்களும் அமரன் திரைப்படத்தை நோக்கியே படையெடுத்து வருகிறார்கள்.

இதனால் அமரன் திரைப்படத்தோடு போட்டி போட்டு வெளிவந்த பிரதர் திரைப்படம் வசூலிலும் விமர்சனத்திலும் பின்தங்கி இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கிறது. ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் வெளிவந்த முதல் நாள் ரூ. 2.5 கோடி வசூல் ஈட்டிய நிலையில் இரண்டாவது நாள் ரூ. 2.25 கோடி வசூல் ஈட்டி இருக்கிறது .

ஆனால் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ40. 65 கோடி வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இதனால் பல மடங்கு வித்தியாசத்தில் அமரன் திரைப்படம் மொத்தமாக அடி வாங்கிவிட்டது.

எனவே சிவகார்த்திகேயனின் அமரனால் ஜெயம் ரவி மொத்தமாக அடித்து சாத்தப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் கூறுகிறது. பாவம் மனிஷன் ரொம்ப நாட்களுக்கு பிறகு எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படம் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டு இருந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் மொத்தத்தையும் தூக்கி வாரி சாப்பிட்டுவிட்டார்.

  • Nayanthara Talk Indirectly about Prabhu Deva இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
  • Views: - 92

    0

    0