திடீரென விஜய் சேதுபதியை வாழ்த்திய SK…! என்னவா இருக்கும்..?

Author: Selvan
29 November 2024, 6:18 pm

சீனாவில் கலக்கும் மகாராஜா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

Maharaja Movie Success in China

இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தம் ஆகி ரொம்ப பிஸியாக இருக்கிறார்.இந்த சூழலில் தற்போது தன்னுடைய சக நடிகரான விஜய்சேதுபதியின் மகாராஜா படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்க: மீண்டும் தனுஷை சீண்டிய நயன்தாரா…வைரலாகும் இன்ஸ்டா பதிவு..!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் போன்ற மொழிகளில் வெளிவந்த மகாராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

Maharaja Tamil Movie International Success

தற்போது சீனாவிலும் இப்படம் வெளியாகி பல சாதனைகளை புரிந்து வருகிறது.சீன ரசிகர்களை கண்ணீரில் மூழ்கடித்த மகாராஜா திரைப்படம்,வெளியான ஐந்தே நாட்களில் 500 கோடி மேல் வசூலை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் படக்குழுவிற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த பதிவு தற்போது சினிமா ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.

  • Aadujeevitham Oscar selection மூன்றாவது முறை ஆஸ்காரை குறிவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்…எந்த படத்திற்கு தெரியுமா ..!
  • Views: - 110

    0

    0

    Leave a Reply