நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.
தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.
மேலும், படத்தின் முன் பதிவு கோடிகளில் கலெக்ஷன்ஸ் குவித்துவிட்டது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கியுள்ளது. இப்படத்தில் ரஜினி ” டைகர் முத்துவேல் பாண்டியன்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் மிரட்டியிருக்கிறார். மேலும் யோகி பாபு வழக்கம் போல் காமெடியில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். குறிப்பாக ரஜினியின் மேனரிசம் வேற லெவல்… மாஸ்னா மாஸ் அப்படி ஒரு மாஸ்… “ஓரளவுக்கு மேல நம்மகிட்ட பேச்சே கிடையாது… வீச்சு தான்” என்ற வசனம் சும்மா தெறிக்குது… சைலண்டா சம்பவம் செய்து வில்லன்களை திணறவைத்தார்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் படம் குறித்த ஒரு ஸ்வாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. அதாவது, சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ஜெயிலர் டிரைலரில் இடம்பெற்றுள்ளது. எனவே இதில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு, இந்தி , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் கூட்டம் படத்தில் உள்ள நிலையில் மேலும் சில பிரபலமான நடிகர்கள் போட்டு படத்தை கொத்து பரோட்டா பண்ணியிருக்காரு நெல்சன் என நெட்டிசன்ஸ் விமர்சித்து மீம்ஸ் போட்டு தள்ளியுள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.