“இனிமே வடிவேலு பாலாஜியின் பசங்களோட படிப்பு செலவு முழுவதையும் ஏற்கிறேன்” – சிவகார்த்திகேயன் !

11 September 2020, 1:52 pm
Quick Share

மனிதனாக பிறந்தால் இறப்பு என்பது சகஜம். ஆனால் சிலரின் இறப்பு என்பது ஈடு கட்ட முடியாத ஒன்று. அந்த வகையில் 42 வயதான காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

அவரது மரணம் குடும்பத்தாரையும், திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் வடிவேல் பாலாஜிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கினார். பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு நடிகர்கள் பலர் வந்து கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினார்கள். இதில் விதிவிலக்காக வடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு ஆறுதல் மட்டும் சொல்லாமல், “அவர் மகன் மகளின் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இச்செய்தி வைரலாக பரவி ரசிகர்கள் மத்தியில் இவரை மேலும் உயர்த்தி சென்றுள்ளது. இவர்கள் இருவரும் விஜய் டிவியில் அது இது எது என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்பது கூடுதல் தகவல்.

Views: - 5

0

0