தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், தற்போது அரசியலுக்குள் நுழைந்துள்ளார். இந்த நிலையில் தான் நடித்த “GOAT” திரைப்படத்தில் “துப்பாக்கியை பிடிங்க சிவா” என்று கூறி விஜய் சிவகார்த்திகேயனிடம் ஒரு துப்பாக்கியை கொடுப்பார். “நீங்க ஏதோ முக்கியமான வேலையா போற மாதிரி தெரியுது. அது வரைக்கும் நான் பார்த்துக்குறேன்” என சிவகார்த்திகேயன் விஜய்யை பார்த்து கூறுவார். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும், “அடுத்த தளபதி சிவகார்த்திகேயன்தான்” என பேசத்தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய சிவகார்த்திகேயன், “விஜய் சார் கூட நான் நடித்ததற்கு பிறகு இவர் அடுத்த தளபதி, குட்டி தளபதி ஆகப்பார்க்கிறார் என கேலி செய்தனர். ஆனால் அவர் அப்படி நினைத்திருந்தால் என்னிடம் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார். நானும் வாங்கியிருக்க மாட்டேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “நான் அவரது ரசிகர்களை கவரப்பார்க்கிறேன் என கூறுகிறார்கள். அவரது ரசிகர்களை அப்படி யாராலும் பிடிக்க முடியாது. அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்” எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.