முதல் முறையாக சூர்யா பட இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

Author: Udhayakumar Raman
23 March 2021, 9:17 pm
Quick Share

இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதே போன்று அயலான் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக அதுவும், இன்ஜினியரிங் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, பால சரவணன், முனீஷ்காந்த், காளி வெங்கட், ஷிவாங்கி, சூரி ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

முதல்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது சென்னையில் அதுவும் பிரபலமான திரையரங்கில் டான் படத்தின் 2ஆம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து மீண்டும் கோயம்புத்தூருக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்ததாக அயன், கோ, அநேகன், கவண், காப்பான் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கே வி ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை தளபதி விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 62

2

0