சிவகார்த்திகேயனுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய் பட இயக்குனர்.. மெகா கூட்டணியில் உருவாகும் SK 25..!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார். கடைசியாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இப்படம் சிவகார்த்திகேயன் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சில இடங்களில் நஷ்டங்களை இப்படம் சந்தித்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படம் தான் எஸ்கே 21 இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், வருகிற 15ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து எஸ்கே 22 படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கு உள்ளார்.

இப்படத்திற்கான வேலைகள் தற்போது, மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கோலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், எஸ்கே 25 திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு தான் எஸ்கே25 படத்தை இயக்கப் போகிறார் என்றும், மாநாடு திரைப்படம் வெளிவந்த சமயத்தில் இருந்து சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம் குறித்து பேசப்பட்டு வருகிறது.

தற்போது, GOAT படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு இப்படத்திற்கு பின்னர் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை தான் இயக்கப் போகிறார் எனக் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Poorni

Recent Posts

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

59 minutes ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 hour ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 hour ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

2 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

3 hours ago

இட்லி வர தாமதானதால் ஆத்திரம்.. ஹோட்டல் கடை உரிமையாளரின் மண்டை உடைப்பு!

வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…

3 hours ago

This website uses cookies.