2ம் பாகமாக தயாராக இருக்கும் சிவகார்த்திகேயனின் ஹிட் திரைப்படம்..! அதே கூட்டணியில் வருமா?

Author: Aarthi Sivakumar
14 October 2021, 1:45 pm
Quick Share

அனைவரது வீடுகளிலும் நம்ம வீட்டுப்பிள்ளையாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது இவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அதன்பின் அயலான் ய படத்தை தொடர்ந்து, அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். அடுத்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம் அல்லது ரஜினிமுருகன் ஆகிய படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ரஜினி முருகன் படத்தை தயாரிக்க திருப்பதி பிரதர்ஸ் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு 22 கோடி பட்ஜெட்டில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் 51 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Views: - 593

5

2