கன்னட சூப்பர் ஸ்டாரின் 130 வது படம்; இயக்க இருப்பது தமிழ் இயக்குனர்; லேட்டஸ்ட் அப்டேட்,..

Author: Sudha
14 July 2024, 1:47 pm
Quick Share

கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்தியத் திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

ரஜினியுடன் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.சில நிமிடங்களே இவர் ஜெயிலர் படத்தில் வந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

சிவ ராஜ்குமார் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். சிவராஜ் குமாரின் 130 வது திரைப்படத்தை பற்றிய அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது.

சிவ ராஜ்குமாரின் 130 வது படத்தை பிரபல இயக்குனர் ரவி அரசு தான் இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சத்யஜோதி தியாகராஜன் தான் இப்படத்தை தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் ரவிஅரசு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஈட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷை வைத்து ஐங்கரன் எனும் திரைப்படத்தை இயக்கினார்.

  • Hema கேரள சினிமாத்துறையை அதிர வைத்த பாலியல் விவகாரம்.. முன்ஜாமீன் கேட்டு அலையும் பிரபல நடிகர்!
  • Views: - 75

    0

    0