டான் படத்தில் வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யா?

31 January 2021, 4:54 pm
Quick Share

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் டான் படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. டாக்டர் படம் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்றும், அயலான் படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இந்தப் படத்தை இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இவருக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்த நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும், ஷிவாங்கி, புகழ், பாலா, பால சரவணன், கலையரசன், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக ஸ்பைடர் மற்றும் மெர்சல் ஆகிய படங்களில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0