“ஜின்” என்ற திரைப்படத்தை இயக்கிய டி.ஆர்.பாலா, அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நான் ஒரு பிரபலமான நடிகரிடம் ஜின் படத்தின் கதையை கூறினேன். அவர் என்னுடைய கதையை பிடித்திருக்கிறது என கூறினார். ஆனால் அவருக்காக சில காட்சிகளை மாற்றியமைக்கச் சொன்னார். அதன் பின் அவருடன் டிஸ்கஷனில் உட்கார்ந்து சில காட்சிகளை மாற்றினேன். இவ்வாறு டிஸ்கஷனிலேயே இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டது. இதனிடையே அவர் நடித்த இன்னொரு திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
அதன் பின் நான் அவரை சந்திக்கச் சென்றபோது அவர் என்னை யார் நீ என கேட்டார். நீ சினிமாவில் இருக்கத் தகுதியே இல்லை என கூறி அவமானப்படுத்தினார்” என்று மிகவும் மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டார். “ஜின்” பட இயக்குனர் இவ்வாறு பேசியது இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் பலரும் யார் அந்த நடிகர் என கேள்வி எழுப்பத் தொடங்கினர். இதனை தொடர்ந்து சினிமா பத்திரிக்கையாளர்கள் பலரும் “ஜின்” பட இயக்குனரை அலைக்கழித்தது நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான் என்று கூறிவந்தனர்.
இச்செய்தி பூதாகரமாக வெடிக்க எஸ்.ஜே.சூர்யா இதற்கு விளக்கமும் அளித்தார். அதாவது, “நான் ஜின் பட இயக்குனரிடம் அந்த கதை பிடித்திருக்கிறது, ஆனால் திரைக்கதை பிடிக்கவில்லை, வேறு ஒரு நடிகரை சென்று பாருங்கள் என்று மரியாதையுடன்தான் தெரிவித்தேன். அவரை நான் அவமானப்படுத்தவில்லை” என கூறி “ஜின்” பட இயக்குரின் குற்றச்சாட்டை மறுத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ், “அந்த நடிகர் எஸ்.ஜே.சூர்யாதான். எனக்கு நன்றாகத் தெரியும். ஜின் பட இயக்குனர் கதை சொல்லும்போது நான் எஸ்.ஜே.சூர்யாவுடன்தான் இருந்தேன். அந்த இயக்குனர் சொன்ன கதை எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிடித்திருந்தது. இயக்குனருடன் டிஸ்கஷன் செய்து கதையை மெருகேற்றினார்.
ஆனால் மாநாடு திரைப்படம் வெளிவந்து ஹிட் அடித்த பிறகு அந்த இயக்குனரை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டார். எஸ்.ஜே.சூர்யா எப்போதுமே பொய் சொல்பவர். அவரிடம் நேர்மை என்ற ஒன்றே கிடையாது” என கூறினார். டி.ஆர்.ரமேஷ் இவ்வாறு பேசியது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
மன்னிப்பு கேட்கமாட்டேன் “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்துகொண்ட நிலையில் அவரை குறித்து…
2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் சக்கரம் போல் சுழன்று தேர்தல் பணிகளை…
அதிர்ச்சியில் திரையுலகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் ராஜேஷ், இன்று உடல்நிலை சரியில்லாத…
ராஜேஷ் மரணம் இன்று காலை தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக அமைந்துள்ளது நடிகர் ராஜேஷின் மரணச் செய்தி. கிட்டத்தட்ட…
திடீர் மரணம் கே பாலச்சந்தரின் “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமான ராஜேஷ், “கன்னிப் பருவத்திலே” திரைப்படத்தில்…
பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோக்கள் நிறைய இருந்தாலும், சரிகமப நிகழ்ச்சி தனி ரசிகர்கள் படை உண்டு. காரணம்,…
This website uses cookies.