தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.ஜே.சூர்யா. “வாலி”, “குஷி”, “நியூ”, “அன்பே ஆருயிரே” போன்ற திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தான் இயக்கிய “நியூ” திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டார். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு கட்டத்திற்கு பிறகு வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.
இயக்குனர், ஹீரோ ஆகிய அவதாரங்கள் அவருக்கு கைக்கூடாத நிலையில் வில்லன் அவதாரம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடிக்கத் தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது “LIK”, “இந்தியன் 3” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “எனக்கு மூன்று காதல்கள் இருந்தது. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பார்கள். எனக்கு மூன்று சூடுகள் பட்ட பிறகுதான் இனி காதலிக்கக்கூடாது என்று உணர்ந்தேன். நான் எதிலாவது கமிட் ஆகியிருந்தால் என்னுடைய சுதந்திரம் பறிபோயிருக்கும். அதனால் என்னுடைய மூன்று காதலிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். எஸ்.ஜே.சூர்யா இவ்வாறு பேசியது வைரல் ஆகி வரும் நிலையில் இணையவாசிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அறிக்கை போர் ரவி மோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு சமீப நாட்களாக நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனிடையே இருவரும் ஒருவருக்கொருவர் மாறி…
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவன் செய்தியாளர்களுக்கு…
அரசியல்வாதி விஜய் விஜய் நடித்து வரும் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் விஜய் இடம்பெறும்…
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றம்…
சுமாரான வரவேற்பு சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த மே 16 ஆம் தேதி வெளியான “டிடி நெக்ஸ்ட்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
This website uses cookies.