10 ஆண்டுகள் திரை பயணம்.. உணர்ச்சிகளுடன் நன்றி தெவித்துள்ள சிவகார்த்திகேயன்..

Author: Rajesh
3 February 2022, 2:05 pm
Quick Share

நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கிய சினிமா பயணித்தில் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்தையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், உங்கள் இல்லங்களிலும், இதயத்திலும், எனக்கு மக்கள் அளித்திருக்கும் இடம் நினைத்து கூட பார்த்திராத நிஜம் என தெரிவித்துள்ளார். மேலும், முதல் வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ், உடன் பயணித்து வரும் திரைப்பட இயக்குனர்கள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த அறிக்கையில், மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்ட தமிழக மக்களுக்கும், என்னுடைய ஆரம்பகாலம் முதல் வெற்றி-தோல்வி என அனைத்திலும் உடனிருந்து என்னைக் கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளார். எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் இன்னும் கடினமாக உழைத்து ரசிகர்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வவை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 708

0

0