காலேஜ் ஸ்டூடண்டாக நடிக்கும் சிவகார்த்திகேயன்?

27 January 2021, 5:51 pm
Quick Share

டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் கல்லூரி மாணவராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அயலான் மற்றும் டாக்டர் படங்களின் படப்பிடிப்புகளை சிவகார்த்திகேயன் முடித்துக் கொடுத்துள்ளார். இந்த இரு படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் 19 ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பு இன்று வெளியானது. அதன்படி, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். மேலும், அந்தப் படத்திற்கு டான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது என்று அறிவிப்பு வெளியானது.

மேலும், வீடியோ ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் தங்களது லைகா டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பேச்சுலர் ஆப் இன்ஜினியரிங், எம்பிஏ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. கால்பந்து மைதானம், கல்லூரி வளாகம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், டான் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து காளி வெங்கட், பால சரவணன் ஆகியோரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதோடு, KPY தீனா, ரக்‌ஷன், குக் வித் கோமாளி புகழ், ஷிவாங்கி, பாலா ஆகியோருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் கல்லூரி மாணவர்களாக நடிப்பார்கள் என்று தெரிகிறது. விரைவில் டான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.

Views: - 0

0

0