மரக்கன்றுகள் நட்ட விஜயை பார்த்து மீரா மிதுன் கூறியதை பாருங்க – செம்ம கோபத்துல விஜய் ரசிகர்கள்..!

11 August 2020, 9:25 pm
Quick Share

கொரோனாவால் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்க ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த தெலுங்கு Superstar மகேஷ்பாபு, பிறந்தநாள் அன்று ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ படி வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டு அதை புகைப்படத்தை வெளியிட்டார்.

அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய நண்பர்கள் ஆன நடிகர் விஜய், தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர், ஆகியோரையும் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று மகேஷ்பாபுவின் சவாலை விஜய் ஏற்று, தனது இல்லத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார். ”இது உங்களுக்காக மகேஷ் பாபு. நல்ல ஆரோக்கியம் மற்றும் கிரீன் இந்தியாவுக்காக நன்றி. பாதுகாப்பாக இருங்கள்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஜய்.

உங்கள் வில்லாவுக்குள் செடி நடுவது பொது சேவையாகாது. செடி நடுதல் என்றால் என்ன என்று விவேக் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்று கிண்டலடித்துள்ளார்.
இதை பார்த்த விஜய் ரசிகர்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 16

0

0