” வேற லெவல்… வெறித்தனம், செல்வா FANS ASSEMBLE” நெஞ்சம் மறப்பதில்லை SNEAK PEEK !

1 March 2021, 6:19 pm
Quick Share

கட்டபா ஏன் பாகுபலிய கொன்னாரு?… வலிமை Update எப்போ ? என பல கேள்விகள் சுற்றி வந்தாலும் இதற்கு முதலில் விதை போட்ட கேள்வி ” நெஞ்சம் மறப்பதில்லை எப்போ ரிலீஸ் பாஸ் ? என்பதுதான் வருட முடிவில் வரும் எல்லோருக்குமான கேள்வி. Cult இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் – நெஞ்சம் மறப்பதில்லை.

நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது. பாடல்கள் எல்லாம் செம ஹிட்டு. ” இந்த படம் ரிலீஸ் ஆனா ஸ்டார் ஆகிவிடுவேன் ” என Sj சூர்யா ஒரு பேட்டியில் குறிப்பிட பற்றிக்கொண்டது எதிர்பார்ப்பு. 2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய நெஞ்சம் மறப்பதில்லை படம் பல தடங்கல்களால் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தின் 2 நிமிட SNEAK PEEK தற்போது வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ” செல்வா FANS ASSEMBLE” என மார்த்தட்டி வருகிறார்கள்.

Views: - 671

6

0