புன்னழகை அரசி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை சினேகா 2000ம் காலகட்டத்தில் ஓஹோஹோன்னு புகழ் பாராட்டப்பட்ட நடிகையாக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்தார். 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள் உருவாகினர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.
இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. திருமணம், குழந்தை பிறப்பிற்கு பிறகு சில ஆண்டுகள் பிரேக் விட்டிருந்த சினேகா பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
கிடைக்கும் ரோல்களில் நடித்து ஸ்கோர் செய்து வருகிறார். தற்போது தளபதி 68 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட சினேகாவின் கணவர் பிரசன்னா சினேகாவுடன் சேர்ந்து ரொமான்டிக் நடனமாடினார். அது பார்க்கவே மிகவும் ரியலிஸ்டிக்காக இருந்ததால் ” இந்த ஜோடியின் காதல் இன்னும் குறைவே இல்லையே” எனக்கூறி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.