கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர்தான் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். குறிப்பாக “ஆடுகளம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒத்த சொல்லால” என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியவர். இவரது நடன அமைப்பே மிகவும் தனித்துவமாக இருக்கும்.
இவர் தற்போது தமிழ்நாடு டான்ஸர் சங்கத்தின் தலைவராக உள்ளார். இந்த நிலையில்தான் இவர் மீது பல புகார்கள் எழுந்துள்ளன.
“லியோ” திரைப்படத்தில் இடம்பெற்ற “நான் ரெடிதான்” என்ற பாடலை நம்மில் பலரும் ரசித்து பார்த்திருப்போம். அந்த பாடலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் தினேஷ்தான். அப்பாடலில் 1500 டான்சர்கள் நடனமாடியிருந்தனர். இந்த நிலையில் இப்பாடலில் நடனமாடிய 1500 டான்சர்களுக்கும் சரியாக ஊதியம் தரப்படவில்லை எனவும் அந்த 1500 டான்சர்களை நடனமாட வைப்பதற்காக தினேஷ் வாங்கிய ரூ.35 லட்சத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் டான்சர் சங்கத்தில் உள்ள பலரும் தினேஷ் மீது புகார் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த டான்ஸ் மாஸ்டர் தினேஷ், “லியோ படத்தில் 1500 டான்சர்கள் நடனமாடியிருந்தாலும் அதில் நடன சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 500 பேர்தான். மீதி 1000 பேர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். நடன சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 500 பேருக்கு முறையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1000 பேருக்கு சம்பளம் கொடுப்பது குறித்து லியோ தயாரிப்பாளரும் பெப்சி அமைப்பும் சேர்ந்து முடிவெடுத்தார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஒரு பாடலுக்கு நடனம் அமைப்பது என்பது மிகவும் கடினம். இயக்குனருக்கும் பிடிக்க வேண்டும், தயாரிப்பாளருக்கும் பிடிக்க வேண்டும். அதை விட முதலில் நடிகருக்கும் பிடிக்க வேண்டும். அப்படிப்பட்ட டென்சனில் இருந்தவனிடம் சம்பள விவகாரத்தை எடுத்துக்கொண்டு வருவது சரியல்ல” என விளக்கம் கொடுத்துள்ளார்.
ரூ.35 லட்சம் முறைகேடு மட்டுமல்லாது பாலியல் புகாரில் சிக்கிய நடன இயக்குனரின் மீது தினேஷ் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.