ப்பா… ஒரு நாள் கூட முடியல, அதுகுள்ள வலிமை Motion Poster-க்கு இவ்வளவு லட்ச Like-ஆ ?

12 July 2021, 5:44 pm
Quick Share

H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஒரேயொரு ஆக்‌ஷன் காட்சி மட்டுமே எஞ்சியிருக்கிறது. தற்போது ஹைதராபாதில் Patch Work இருக்கிறது. அதன் முடித்து பைக் ஸ்டண்ட் காட்சிக்கு படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல இருக்கின்றனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை புரிந்துள்ளது. உதாரணத்திற்கு சில நாட்களுக்கு முன், First Look வெளியாகாத நிலையில், Book My Show App-இல் 1.7 million நபர்கள் இந்த படத்தை காண ஆர்வமாக இருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதை இந்திய அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.

மேலும், நேற்று வெளியான வலிமை படம் மோஷன் போஸ்டர் இந்திய அளவில் அதிக லைக்குகளை பெற்ற மோஷன் போஸ்டராக வலிமை இடம்பெற்றுள்ளது. யூ-ட்யூபில் அந்த Motion போஸ்டருக்கு இதுவரை 1 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் அதிக லைக்குகள் பெற்ற மோஷன் போஸ்டராக இருந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் அந்த சாதனையை முறியடித்துள்ளது. தலையின் சாதனையை முறியடித்த பெருமை தலைக்கே சேரும்.

Views: - 525

40

0