ஹிந்தியில் ரீமேக் ஆகும் சூரரை போற்று…! சூர்யா கதாபாத்திரத்திற்கு போட்டி போடும் ஹீரோக்கள்..!

13 July 2021, 8:26 am
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

கொரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியாகாமல் அமேசன் ரயில்வேயில் வெளியானதற்கு ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்தது சூரரைப்போற்று படம். ஆனால் அதையெல்லாம் தாண்டி மாபெரும் வெற்றிப்படமாக தற்போது உருவெடுத்துள்ளது. இதை தற்போது இந்தியில் ரீமேக் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது அது குறித்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை சுதா கொங்கரா இயக்குவதாக முடிவாகியுள்ளது. சூர்யா நடித்த கதாபாத்திரத்திற்கு ஹிர்திக் ரோஷன், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப் போற்று திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 300

4

0