சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது ரேசில் இடம்பெற்ற சூரரைப் போற்று !

26 February 2021, 1:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு அதிகப்படியான ரசிகர்களை கொண்ட சூர்யா. சிங்கம் 2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஹிட் என சொல்லிக்கொள்ளும் படி ஒரு படம் அமையவில்லை என வருத்தத்தில் இருந்தார் அதை தவிடுபொடி ஆக்கி விதத்தில் சூரரை போற்று பெரிய வெற்றி அடைந்துள்ளது.

வித்தியாசமான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் உள்ள நடிகர் சூர்யா எட்டு வருடங்களாக சறுக்கல்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் சூரரைப்போற்று மிக பெரிய Comeback கொடுத்தது.

தற்போது அந்த படத்திற்கு பெருமைச் சேர்க்கும் வகையில் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியுள்ளது.

அந்த வரிசையில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது. தற்போதைய நிலவரம் என்ன என்றால், சிறந்த படத்திற்கான தேர்ச்சிபெற்ற 366 படங்களில் சூரரை போற்று படமும் ஒன்று என்று அதிகார பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.

Views: - 624

2

0