சூரரைப் போற்று திரைவிமர்சனம்

12 November 2020, 7:25 pm
Quick Share

இந்தியாவில் குறைந்த விலையில் விமானப் பயணங்களைச் சாத்தியமாக்கிய ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படமே சூரரைப் போற்று.

மதுரை சோழவந்தானைச் சேர்ந்த நெடுமாறனுக்கு குறைந்த விலையில் எல்லோரும் பயணம் செய்யும் வகையில் ஒரு விமான நிறுவனத்தைத் துவங்க வேண்டுமென்பது கனவு. ஆனால், ஏற்கனவே அந்தத் தொழிலில் இருப்பவர்களும் அதிகாரவர்க்கமும் சேர்ந்துகொண்டு அவருக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

இத்தனை தடைகளையும் தாண்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மத்தியில் சூர்யா தனது பயணத்தில் எவ்வாறு வெற்றி பெறுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை.

பெர்பார்மன்ஸ்:

சூர்யா தன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இப்படி ஒரு கதாபாத்திரத்திற்காக தான் சூர்யா காத்திருந்தது போலவே ஒவ்வொரு இடத்திலும் தனது தனி முத்திரையைப் பதிக்கிறார்.

சூர்யாவின் காதல் மனைவியாக அபர்ணா பாலமுரளி. திரைப்படத்தில் பேக்கரி ஒன்றினை சொந்தமாக நடத்தி வரும் அவர் தன் கணவன் கஷ்டத்தை அறிந்து கடைசி வரை கூட நிற்பதில் ஆணுக்கு எந்த விதத்திலும் பெண் சளைத்தவள் இல்லை என்பதை காட்சியின் வழியே சுதா கொங்கரா காட்சி படுத்தியுள்ளார்.

பரிஷ், பாலையா என இருவருமே கார்ப்பரேட் முதலாளிகளாக நடிப்பில் அசத்தியுள்ளனர். வட இந்திய மொழி நடிகர்களாக இருப்பினும் அவர்களுக்கு அழகாக டப்பிங் பேச பட்டு இருக்கிறது.

மேலும் திரைப்படத்தில் வரும் காளி வெங்கட், கருணாஸ், ஊர்வசி, மோகன்பாபு, சூர்யாவின் அப்பாவாக வருபவர் என அனைவருமே தங்களது நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர். இருப்பினும் ஏதோ ஒன்று குறைவது போலவே காட்சியமைப்புகள் இருக்கிறது.

சிறப்பம்சங்கள்
கதைக்களம்
நடிகர்களின் பங்களிப்பு
பின்னணி இசை

பலவீனங்கள்
முதல் பாதி

ஒரு வரி பஞ்ச்: சூரரைப் போற்று திரைப்படத்தை இன்னும் கொஞ்சம் சிறப்பாகவே போற்றி இருக்கலாம்.

ரேட்டிங் : ****/5

Views: - 29

0

0