பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்த “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ராஜ்கிரண், ஸ்வாசிகா, யோகி பாபு உட்பட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் குடும்ப சென்டிமண்ட் திரைப்படமாக அமைந்துள்ளது.
இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்திற்கு பாஸிட்டிவ் விமர்சனங்களையே அளித்து வருகின்றனர். பல நாட்கள் கழித்து ஒரு நல்ல குடும்ப சென்டிமண்ட் திரைப்படமாக இத்திரைப்படம் அமைந்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இன்று இத்திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மதுரையைச் சேர்ந்த சூரி ரசிகர்கள் சிலர் திருப்பரங்குன்றம் கோயிலில் “மாமன்” திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக மண் சோறு சாப்பிட்டனர். இந்த நிலையில் சில மணிநேரங்களுக்கு முன்பு கமலா திரையரங்கில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சூரி தனது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டது குறித்து மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.
“மாமன் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என சொல்லி மதுரையைச் சேர்ந்த சில அன்பு தம்பிகள் மண் சோறு சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை அன்பு தம்பிகள் என்று சொல்வதற்கு கூட வெட்கமாக இருக்கிறது. தம்பிங்களா, இது ரொம்ப முட்டாள்தனமானது. கதை நன்றாக இருந்தால் படம் ஓடப்போகிறது. அதை விட்டுவிட்டு மண் சோறு சாப்பிட்டால் இந்த படம் ஓடிவிடுமா என்ன? மிகவும் வேதனையாக இருக்கிறது. அந்த காசுக்கு யாருக்காவது தண்ணீர் வாங்கி கொடுத்திருந்தால் கூட சந்தோஷப்பட்டிருக்கலாம். நிறைய பேருக்கு மோர் வாங்கி கொடுத்திருக்கலாம். நிறைய பேருக்கு சாப்பாடு போட்டிருக்கலாம்.
இது போன்ற செயல்கள் செய்பவர்கள் என் தம்பிங்களாக மட்டுமல்ல ரசிகர்களாக இருப்பதற்கு கூட தகுதியற்றவர்கள். நான் ஒரு வேளை சாப்பாட்டிற்காக கஷ்டப்பட்டவன். அப்படி கஷ்டப்பட்டு தற்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். ஆனால் நீங்கள் அந்த சாப்பாட்டிற்கு மரியாதை தரவே இல்லை. எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. தயவு செய்து இது போன்ற செயலை இனி செய்யாதீர்கள்” என மிகவும் ஆதங்கத்தோடு பேசியுள்ளார் சூரி. இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உதித் நாராயணன் சார் நீங்களா? நேற்று முன்தினம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில்,…
சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த சிறையில் பலத்த பாதுகாப்பையும்…
சூரியின் “மாமன்” சூரி கதாநாயகனாக நடித்து பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள “மாமன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை பார்த்த…
காலம் கலிகாலம் என்பது ஒவ்வொரு நாளும் நிரூபித்துக்கொண்டே உள்ளது. பாடம் கற்பிக்க வரும் மாணவர்கள் மீது ஆசிரியைகள் தவறான எண்ணங்களை…
மதுரையில் தென் மாவட்ட கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்…
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த கூலிதொழிலாளியின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா , 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம்…
This website uses cookies.