மீண்டும் சூரி; விருது உறுதி; விலங்கு இயக்குனர் சொன்ன அதிரடி தகவல்,..

Author: Sudha
13 ஜூலை 2024, 1:07 மணி
Quick Share

சூரி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடி காட்சியில் காட்சியில் நடித்து பிரபலமானார்.

நகைச்சுவை நடிகர் சூரி விடுதலை படத்தின் வெற்றிக்குப் பிறகு கதையின் நாயகனாக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் ‘கருடன்’ படத்தின் நடித்ததின் மூலம் கதாநாயகனாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவரது நடிப்பில் அடுத்து கொட்டுக்காளி படம் வெளியாக உள்ளது. இதுதவிர விடுதலை 2 படமும் தயாராகி வருகிறது.

தற்போது நல்ல கதைகளை கவனமாக கேட்டு படங்களை தேர்வு செய்கின்றார் சூரி.

இந்நிலையில் சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விலங்கு வெப் தொடர் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் உடன் சூரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே திரை வட்டாரத்தில் பேச்சு அடிபட்டது.

தற்போது விலங்கு பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

  • சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்து… தொடரும் சோகம் : நடந்தது என்ன?
  • Views: - 91

    0

    0