அவ்ளோவ் தான் முடிஞ்சிடுச்சு… “ஸ்பார்க்” பாடலால் சலிப்பான ரசிகர்கள்!

Author:
3 August 2024, 8:34 pm
Quick Share

விஜய்யின் கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் தற்போது சற்றுமுன் வெளியாகியிருக்கிறது. “அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… என் முன்னால நடந்தா கேட் வாக்கு” என்ற வரிகளில் துவங்கும் இந்த பாடல் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் மீனாட்சி சவுத்ரி மற்றும் விஜய்யின் டூயட் பாடலான வெளிவந்துள்ளது. கங்கை அமரன் எழுதியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் பங்கமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் விஜய் ரசிகர்கள் யுவன் சங்கர் ராஜாவை சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வருகிறார்கள். ‘அவ்ளோவ் தான் முடிஞ்சு போச்சு எல்லாரும் கிளம்புங்க’ என்று மிகுந்த சலிப்புடன் இந்த பாடலைப் பார்த்து அதிருப்தி ஆகி விட்டார்கள்.

முதல் பாடலுக்கு பெருசா எதிர்பார்த்தோம் அதுவும் அப்படி ஒன்னும் எங்களை திருப்தி பண்ணல… அதன் பிறகு இரண்டாவது பாடலும் சுமாரா தான் இருந்துச்சு… இந்த மூன்றாவது பாடல் ஆச்சும் நல்லா இருக்கும்னு பெருசா எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தோம் இதையும் இப்படி பண்ணி வச்சியிருக்கீங்க என ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 143

    0

    0