அஜித் என்னோட நல்ல நண்பன் ! அவர் வந்தா என்ன, வரலனா என்ன ? தல Haters-ஐ விளாசிய சரண் !

28 September 2020, 4:57 pm
Quick Share

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் உதவி என்று வருபவர்களுக்கு இல்லை என்றே கூறுவது இல்லை. இந்த உயரத்தை அடைய அவர் யார் உதவியும் இல்லாமலும் முட்டி மோதி இன்று ஆலமரமாக வளர்ந்திருக்கிறார் நடிகர் அஜித். அஜித்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக விதை போட்டவர் எஸ்பிபி அவர்கள் என்று எஸ்பிபி அவர்களே ஒருமுறை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட அஜித் இரு தினங்களுக்கு முன் எஸ்பிபி அவர்களின் இரங்கலுக்கு அஜித் வரவில்லையே என்று ரசிகர்கள் வருத்தப்பட்டனர். சற்று முன் பத்திரிக்கையை சந்தித்த SPB சரண் அவர்கள், அஜித் வராததை குறித்து கேள்வி எழுப்பிய நிருபருக்கு, “அஜித் எனக்கு நல்ல நண்பர். அவர் வந்து அப்பாவ பார்த்தா என்ன, பார்க்கலைனா என்ன? அவரோட சூழல் என்ன என்று எனக்கு தெரியும். அப்பாவின் இறப்பு பற்றி அஜித்தின் வருத்தம் எனக்கு தெரியும், அது ஒரு விஷயமே இல்ல, இதை பெரிது படுத்தாதீங்க” என்று தல Hatersகளுக்கு தக்க பதிலடியை கொடுத்துள்ளார்.

Views: - 20

0

0