சிம்பு ரசிகர்களுக்காக காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு!!

20 November 2020, 8:00 pm
Quick Share

அடுத்த அடுத்த தனது திரைப்பட அப்டேட்களால் தனது ரசிகர்களை திணறடித்து கொண்டு இருக்கிறார் நடிகர் சிம்பு.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தை டப்பிங் பணிகள் உட்பட அனைத்து வேலைகளையும் 30 நாட்களிலேயே முடித்து விட்டு தனது அடுத்த திரைப்படமான மாநாடு பட வேலைகளை தொடங்கி விட்டார்.

இந்நிலையில் மாநாடு திரைப்படமும் 45 முதல் 50 நாட்களுக்குள் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விடும் என தெரியவருகிறது. இந்த ஜெட் வேகத்தில் திரைப்பட பணிகள் செல்லுமேயானால் திரைப்படத்தின் படவேலைகள் பொங்கல் பண்டிகைக்குள் முடிவடைந்துவிடும்.

எனவே இந்த இரு திரைப்படங்களுமே தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த செய்தி சிம்புவின் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

Views: - 0

0

0

1 thought on “சிம்பு ரசிகர்களுக்காக காத்திருக்கும் மிகப்பெரிய பரிசு!!

Comments are closed.