தற்போது இருக்கின்ற காலகட்டத்தில் பல நபர்கள் ஆன்மிகத்தை நோக்கி பயணிக்கின்றனர்.அந்தவகையில் பாய்ஸ் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்த புவனேஸ்வரி தீவிர ஆன்மிகத்தில் இறங்கியுள்ளார்.
இவர் என்னவோ பிடிச்சுருக்கு,தலைநகரம்,பட்ஜெட் பத்மநாபன்,குண்டக்க மண்டக்க போன்ற பல படங்களில் வில்லியாகவும்,கவர்ச்சி நடிகையாவும் நடித்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு,பின்பு மீண்டும் விடுதலை செய்யப்பட்டார்.இவர் பல சீரியல்களிலும் வில்லியாக நடித்துள்ளார்.
இதையும் படியுங்க: புஷ்பா 2 பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட சாக்ஷி அகர்வால் : தீயாய் பரவும் வீடியோ!
இந்த நிலையில்,இவர் தற்போது ஆன்மிக துறவியாக மாறி கோவில் கோவிலாக சென்று அங்கு இருக்கக்கூடிய ஏழை எளிய மக்களுக்கு உணவு அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து இது பற்றி பேசியுள்ளார்.அதில் அவர் கூறியது “நான் வறுமை காரணமாக என்னுடைய சொந்த ஊரான சங்கரன்கோவிலில் இருந்து சென்னைக்கு நடிக்க வந்தேன்.அப்படி தான் முதன் முதலில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.மக்களும் அதை விரும்பினார்கள்.
ஒரு கட்டத்தில் என்னை தவறானவர்கள் என்று பட்டம் சூட்டி பல வீண் வதந்திகளுக்கு ஆளாகினேன்.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் என மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டு என்னை ஆன்மிகத்துக்கு இழுத்தது.அதனால் என்னுடைய மீதி வாழ்க்கையை முழுவதும் ஆன்மிக இறைப்பணிகளில் தொண்டு செய்ய இறங்கியுள்ளேன்.தினமும் ஏதாவுது ஒரு ஆன்மிக தளத்திற்கு சென்று சாப்பாடு கொடுத்து வருகிறேன்” என்று அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.
சென்னையில் எனக்கு சொந்தமான வீடுகளை படப்பிடிப்பு தளத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறேன்,அதில் கிடைக்கும் வருமானத்தில் இந்த மாதிரி நான் பண்ணுகிறேன் என முன்னாள் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி கூறியுள்ளார்.
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
This website uses cookies.