கிளியோபாட்ரா ராணியாக மாறிய ஸ்ருதி ஹாசன் ! வைரலாகும் வீடியோ ! செம்ம மாஸ் !

4 November 2020, 6:40 pm
Quick Share

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, அஜித், தனுஷ் ஆகியோருடன் நடித்திருக்கிறார். இவருகென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இவர் முதலில் சினிமாவில் அறிமுகமானது இசையமைப்பாளராக அதன்பின் நடிகையாக கொடிகட்டி பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் படங்கள் நடித்திருக்கிறார். தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்போது Trending-இல் இருக்கும், Face App – ஐ பயன்படுத்தி ஸ்ருதிஹாசன், தனது முகத்தை பல வருடங்களுக்கு முன் வந்த கிளியோபாட்ரா திரைப்படத்தின் கிளியோபாட்ராவின் முகத்திற்கு பதிலாக வைத்து அதை அப்படியே பொருத்தி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த Face App என்ன என்றால், நம்மளது முகத்தை அப்படியே வேறு ஒருவரின் முகத்தில் அதை அப்படியே கனகச்சிதமாக பொருத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதை நம்ம ஸ்ருதி ஹாசனும் பயன்படுத்தி இவ்வாறு செய்தது, மேலும் அந்த App-இற்கான ஆதரவு கூடியுள்ளது. இவர் வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவபட்டு வருகிறது.

Views: - 48

0

0