எனக்கு கட் அவுட் வேண்டாம்… விஜய் தம்பிக்கு மட்டும் அடிங்க – வானத்தப்போல மனம் படைச்ச மன்னவனே!

நடிகரும் , தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் குன்றி வீட்டிலேயே முடங்கினார். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்தது. மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் வெண்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுவதாக தெரிவித்தது.

இதனிடையே, விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், 9 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கேப்டன்‌ விஜயகாந்த்‌ அவர்கள்‌ நுரையீரல்‌ அழற்சி காரணமாக மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர்‌ ஆதரவுடன்‌ சிகிச்சை பெற்றிருந்தார்‌. மருத்துவ பணியாளர்களின்‌ கடின முயற்சி இருந்தபோதிலும்‌ அவர்‌ நேற்று முன்தினம் காலை 28 டிசம்பர்‌ 2023 காலமானார்‌.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வரலாறு பேசும் அளவுக்கு அவரது இறுதி ஊர்வலம் பலகோடி மக்கள் கூடி வழியனுப்பி வைத்தனர். இந்நிலையில் விஜயகாந்த் செய்த உதவிகளும் அவரது நற்பண்புகளும் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரபல வில்லன் நடிகர் ஜாக்குவார் தங்கம் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் – விஜயகாந்த் இடையே இருந்த உறவு குறித்து பேசியுள்ளார். அதாவது, நான் செந்தூரப்பாண்டி திரைப்படம் வெளியான சமயத்தில் புதிய ஜிம் ஒன்றை திறந்தேன்.

அதன் திறப்பு விழாவிற்கு விஜய் மற்றும் விஜயகாந்த் இருவரையும் தனித்தனியே சென்று அழைத்தேன். அப்போது விஜயகாந்த் சாரிடம் விஜய்யும் அழைத்துள்ளேன் என கூறியதும் உடனே சந்தோஷப்பட்டு அப்படியா அப்போ விஜய் தம்பிக்கு மட்டும் கடவுட் வைங்க எனக்கு வேண்டாம் என கூறினார். அதே போல் விஜய்யிடம் சொன்னதும்… சூப்பர் அண்ணே! ரொம்ப மகிழ்ச்சி அப்போ எனக்கு கடவுட் வேண்டாம் விஜயகாந்த் அண்ணனுக்கு மட்டும் வைங்க போதும் என்றார். ஆனால், நான் இருவருக்குமே வைத்தேன். இப்படிதான் அவர்கள் உணர்வும், உறவும் ஒரே பாசத்தோடு இருந்தது என ஜாக்குவார் தங்கம் கூறினார்.

UpdateNews360 Rajesh

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

5 minutes ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

51 minutes ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

2 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

2 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

3 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

3 hours ago

This website uses cookies.