வாணி ஜெயராம் மரணத்தில் திடீர் திருப்பம் : தனி வீட்டில் வசித்து வந்த அவர் இறந்தது எப்படி? விசாரணையில் ஷாக் தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 February 2023, 3:57 pm
Vani Death - Updatenews360
Quick Share

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயர்பெயர் லைவாணி என்பதேயாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடல்களை பாடி வந்தார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். “ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி” என்ற சிறப்பு பட்டமும் உள்ளது.

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார்.

அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

வாணி ஜெயராமின் கலைச்சேவையை பாராட்டும் விதமாக கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று அவர் இறந்துவிட்டதாக வெளியான தகவல் இசை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தச் செய்துள்ளது. வீட்டில் இருந்த அவர் திடீரென மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அவரது கணவர் இறந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கையின் வீட்டருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.

எப்போதும் அவரது வீட்டுக்கு காலை 11 மணிக்கு பணிப்பெண் பூங்கொடி என்பவர் வந்து வேலைகள் செய்வது வழக்கம். அப்படி இன்று காலை வந்த போது கதவை தட்டியுள்ளார்.

கதவி திறக்கப்பட்டாததால், வாணியின் தங்கைக்கு பூங்கொடி தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அவர் போலீசுக்கு தகவல் கொடுத்து வந்துள்ளார்.

பின்னர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, முகத்தில் காயத்துடன் அவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இவரது மரணத்திற் திடீர் திருப்பமாய், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருவதால் வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Views: - 665

4

1