கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து காதலை வெளிப்படுத்திய சுஜா வருணி!

15 February 2021, 7:45 pm
Quick Share

காதலர் தினத்தை முன்னிட்டு கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து தனது காதலை வெளிப்படுத்திய சுஜா வருணியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிளஸ் 2 படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் சுஜா வருணி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, வர்ணஜாலம், கஸ்தூரி மான், திருத்தம், பழனி, தங்கம், வசூல், சண்டை, தோழா, எங்கள் ஆசான், ஆயிரம் விளக்கு, சேட்டை, வாத்தியார் என்று 50க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும்,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். கடந்த 2018 ஆம் ஆண்டு சிவக்குமார் என்ற சிவாஜி தேவ்வை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, அத்வைத் என்ற பெண் குழந்தையும் இருக்கிறது.

தற்போது குழந்தையை வளர்ப்பதிலேயே ரொம்பவே பிஸியாகிவிட்டார். இந்த நிலையில், காதலர் தினமான நேற்று தனது காதல் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு என்றென்றும் என் காதலராக என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 14

0

0