அவர் தான் என் வாழ்க்கையை கெடுத்தாரு – சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை வேதனை!

Author: Shree
22 March 2023, 8:21 pm
sundhara
Quick Share

தமிழ் சினிமாவின் கருப்பு வைரம் என பெண் ரசிகைகளால் அதிகம் விரும்பப்பட்டவர் நடிகர் முரளி. கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த இவர் 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பூவிலங்கு எனும் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான இவர் “கடல் பூக்கள்” என்ற திரைப்படத்தில் நடித்து பேமஸ் ஆனார்.

இவர் ஷோபா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இருக்கு அதர்வா, ஆகாஷ், காவ்யா என மூன்று பிள்ளைகள். இதில் அதர்வா பிரபலமான நடிகராக பார்க்கப்படுகிறார். ஆகாஷ் தற்போது புதிய படங்களில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளார். நடிகர் முரளி நடிப்பில் 2002 இல் வெளிவந்த திரைப்படம் சுந்தரா டிரவல்ஸ்.

செந்தில்குமார் இயக்கிய இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் கதாநாயகியாக ராதா நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். இதன் பின்னர் இவர் கேம், அடாவடி, காத்தவராயன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதா, ” நான் சுந்தரா ட்ராவல்ஸ் படத்திற்கு பிறகு சில திரைப்படங்களில் தான் நடித்தேன். 2012 -ம் ஆண்டின் போது நான் ஒருவரை காதலித்தேன். அவரால் தான் என்னுடைய வாழ்க்கை மோசமானது. காரணம் நான் அன்புக்கு அடிமை ஆகிவிட்டேன்”.

பின்னர் வழிமாறிப்போன என்னை என்னுடைய அம்மா சினிமாவில் கவனம் செலுத்த சொன்னார். நானும் நல்ல பாசிட்டிவ்வான கதாபாத்திரத்தை நோக்கி காத்து கொண்டு இருந்தேன். தற்போது பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது” இப்போ தான் வாழ்க்கையில் வெளிச்சம் கண்டுள்ளேன் என்று உருக்கமாக பேசினார்.

Views: - 207

0

1