“தேடியே வந்து விட்டாள் தேவதை போல் ஒருத்தி” – 90s கிட்ஸ் ரசிகர்களை குஷிப்படுத்திய சன்னி லியோன்

1 March 2021, 11:57 pm
Quick Share

ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பரவினார் சன்னி லியோன். ஆனால் மனம் மாறி பாலிவுட்டில் நடிக்க ஆசை வரவே, இந்தியா வந்து இறங்கினார். ஆரம்பத்தில் இவரை ஒதுக்கினாலும் தற்போது பாலிவுட்டில் இவர் இல்லாத ஐட்டம் டான்ஸே கிடையாது என்ற நிலைமையில் இருக்கிறது. அதைத் தவிர பல படங்களில் நடித்திருக்கிறார்.

குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் இந்த கவர்ச்சி கன்னி தன் குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். அவற்றை படம் பிடித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவார். உலகம் முழுவதும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இவரின் மனிதநேய செயலை பாராட்டி வருகின்றனர்.

அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சன்னி லியோன் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முடியைக் கத்தரித்து, திருமண ஆடை அணிந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என கேப்சன் போட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “தேடியே வந்து விட்டாள் தேவதை போல் ஒருத்தி” என்று பாட்டு பாடி உருகி கொண்டிருக்கிறார்கள் 90ஸ் கிட்ஸ் ரசிகர்கள்.

Views: - 986

0

0