சினிமா / TV

ஜெயிலர் வசூலை துவம்சம் செய்திடும்…. “வேட்டையன்”னுக்கு அமோக வரவேற்பு – PUBLIC REVIEW!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை மட்டும் இஐக்கி பிரபலமான இயக்குனராக பெயர் எடுத்திருப்பவர் தான் இயக்குனர் தா. செ ஞானவேல். இவர் கூட்டத்தில் ஒருவன் , ஜெய் பீம், உள்ளிட வெற்றி திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அதன் பிறகு தன்னுடைய மூன்றாவது படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து வேட்டையன் என்ற திரைப்படத்தை எடுக்க வந்தார். திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப்பச்சன் , பகத் பாசில், ராணா ரகுபதி ,மஞ்சு வாரியர் , அபிராமி, துசாரா விஜயன், ரித்திகா சிங் , ரோஹினி மற்றும் ரக்சன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் நடித்திருக்கிறார்கள் .

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி இன்று வெளியாகி இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற மனசிலாயோ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து விட்டது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை குவித்து வருகிறார்கள்.

வேட்டையன் திரைப்படம் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக ஒரு சீன் கூட போர் அடிக்காமல் இருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்தை கூறி இருக்கிறார்கள். எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் என்றால் ரஜினியை பார்க்க தான் கூட்டம் அலைமோதும் .

இந்த திரைப்படத்தில் ரஜினியை தாண்டி பகத் பாசில் காட்சிகள் அடிபொலியாக உள்ளது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். எப்போதும் தன்னுடைய கதாபாத்திரத்தை மிக கச்சிதமாக நடித்துக் கொடுக்கும் இந்த திரைப்படத்தில் கொஞ்சம் கூடுதல் ஆகவே சிறப்பாக நடித்திருக்கிறார் என கூறுகிறார்கள்.

முதல் பாகம் முழுக்க வேட்டியின் படத்தை கண்சிமிட்ட கூட நேரம் இல்லாத அளவுக்கு சீட்டின் நுனியில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படத்தின் திரைக்கதை மற்றும் படத்தின் ஓட்டம் விறுவிறுப்பாக இருப்பதாக இயக்குனரை பாராட்டி இருக்கிறார்கள்.

ரஜினியின் பிரசன்ஸ் ஆப் மைண்டை பயன்படுத்தி இயக்குனர் தாசே சஞ்சய் இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக கையாண்டு இருக்கிறார். ரஜினியின் மாசான என்ட்ரி ஸ்டைல் இது எல்லாம் கலந்தபடி ரசிகர்களுக்கு தரமான ஆயுத பூஜை ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் ஞானவேல்.

இதையும் படியுங்கள் பிக்பாஸ் வீட்டில் அசம்பாவிதம்… தீவிர சிகிச்சையில் ரவீந்திரன் – அடுத்தது வெளியேறப்போவது இவரா?

ரஜினியின் ஸ்டைல் என்பதையும் தாண்டி இந்த திரைப்படத்தில் சோசியல் மெசேஜை பக்காவாக எடுத்துக் கூறியிருக்கிறார். இயக்குனர் ரஜினிகாந்த் ஸ்டைல் மற்றும் மாஸான என்ட்ரி உள்ளிட்டவற்றை செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கும் ஞானவேலுக்கு இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். இந்த திரைப்படம் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தின் வசூலும் வெற்றியை விட பல மடங்கியது வசூலை வாரி குவிக்கும் என படத்தை பார்த்த ஆடியன்ஸ்களை கூறியிருக்கிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.