Exclusive : அண்ணாத்த Release Date – இது தலைவர் தீபாவளி ! போடுறா வெடிய !

25 January 2021, 7:51 pm
Quick Share

அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என பல வருடங்கள் காத்திருந்த மக்களுக்கு அரசியலுக்கு வருவது உறுதி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். கொரோனா காலகட்டம் உடல்நலத்தையும் காலத்தையும் போட்டு தாக்க, இப்ப இல்லனா எப்பவும் இல்ல என அறிக்கை விட்டார். இறுதியில் அரசியலுக்கு வரப்போவதில்லை என கூறியதால் மக்களால் நம்பமுடியாமல் மனமுடைந்து போனார்கள்.

ஆனால் அரசியலுக்கு வராவிட்டாலும் சினிமாவில் அவரைப் பார்க்கலாம் என ஆவலோடு காத்திருந்தார்கள் ரசிகர்கள். அதற்கேற்றார்போல் தர்பார் படத்திற்குப் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இதில் கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்க, சன் டிவி கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று ஒரு பொன்னான தகவலை வெளியிட்டு இருக்கிறது படக்குழு. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பும் முடிந்து நவம்பர் 4 ஆம் தேதியான தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருக்கிறது. சந்தோஷமான செய்தியை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் தீம் மியூசிக்கை இமான் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் அப்டேட் வந்திருச்சு ஆனா தல அப்டேட்டை காணோம் என தல ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Views: - 9

0

0