நிஷாவை மோசமாக திட்டிய சுரேஷ் – என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு !

30 November 2020, 7:24 pm
Quick Share

தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சி பல சண்டைகளுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் நிஷா தனது காமெடிகளால் மக்கள் மனதை கொள்ளை அடித்தார். போக போக ரியோவுடன் அவரது நட்பு வலுவடைந்தது.

என்ன ஆச்சோ, எது ஆச்சோ என்று தெரியவில்லை, ஒரு கட்டத்தில் ரியோவை நம்பியே அந்த வீட்டில் இருக்கிறார் என்று சக போட்டியாளர்களும், ஏன் ரசிகர்களும் கூட குற்றச்சாட்டு வைத்தனர்.

கடந்த வாரத்தில் நடந்த BPO டாஸ்க்கில் கூட ரியோ போனில் அவர்கள் இருவருக்கும் நட்பை பற்றி சொன்ன பொழுது நிஷா கண்ணீர் விட்டு அழுதார். . இந்நிலையில் ரியோவை நாமிநேஷனிலிருந்து காப்பாற்றிவிட்டு வெளியே வந்த ஆஜித்தை அர்ச்சனா, நிஷா, சோம் அனைவரும் கொண்டாடினர்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த சுரேஷ் பிக்பாஸ் பற்றி பல கருத்துக்களை பகிர்ந்து வந்த நிலையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “நிஷ(ம்) விஷம் #Biggboss” என்று கூறியுள்ளார். இது நிஷாவை பற்றியா ? அல்லது வேறு ஒரு தகவலா என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்

Views: - 0

0

0