வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ள செய்திதான் தற்போது Talk of the Town ஆக இருக்கிறது. இத்திரைப்படம் “வடசென்னை” படத்தின் சில அம்சங்களையும் கதாபாத்திரங்களையும் வைத்து உருவாக்கப்படும் திரைப்படம் என வெற்றிமாறன் தெளிவுபடுத்தியிருந்தார்.
இத்திரைப்படத்தின் புரொமோ வீடியோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் இத்திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக சமீப நாட்களாக செய்திகள் வலம் வருகின்றன. அதாவது இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான தாணு சில காரணங்களால் இத்திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளிவந்தது. ஆதலால் சிம்பு வேறு ஒரு தயாரிப்பாளரை அணுகி வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சிம்புவின் “மாநாடு” படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தனது எக்ஸ் தளத்தில் டிவிட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “தொடங்கியது மற்றவர்களின் அலறலை தாண்டி தொடரும். சிங்கத்தின் ஆட்டம் விரைவில்” என தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சிம்பு, வெற்றிமாறன் ஆகியோரை Mention செய்துள்ளார்.
இதன் மூலம் வெற்றிமாறன்-சிம்பு காம்போவில் உருவாகும் திரைப்படம் டிராப் ஆகவில்லை எனவும் அது விரைவில் தொடங்கும் எனவும் சுரேஷ் காமாட்சி கூற வருவதாக ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.