2005 ஆம் ஆண்டு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான “கஜினி” திரைப்படம் சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து சூர்யாவிற்கு பல படங்கள் ஹிட் அடித்திருந்தாலும் “கஜினி” திரைப்படம் போன்ற ஒரு மாபெரும் வெற்றியை எந்த திரைப்படமும் அவருக்குத் தரவில்லை. அந்த வகையில் “கஜினி” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் ஒரு மைல் கல்.
இத்திரைப்படத்தில் சூர்யா சஞ்சய் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கு என்ன நடந்தது என்பதை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை மறந்துவிடும் Short Term Memory Loss- ஆல் பாதிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரமாக அதில் நடித்திருந்தார். மிகவும் அசத்தலாகவும் மிரட்டலாகவும் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்தளவுக்கு நம் மனதுக்கு மிகவும் நெருக்கமான கதாபாத்திரமாக அது அமைந்தது.
“ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜியின் “கருப்பு” திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வெங்கி அட்லூரி, சூர்யாவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் கதையை குறித்து பேசியுள்ளார்.
அதாவது உணர்வுப்பூர்வமான ஒரு குடும்ப செடிமன்ட் கதையை வெங்கி அட்லூரி சூர்யாவிடம் கூறினாராம். அந்த கதையின் கிளைமேக்ஸ் என்ன என்பது கூட முடிவு செய்யவில்லை, ஆனால் சூர்யாவுக்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாம். மேலும் பேசிய அவர், இத்திரைப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் கஜினியின் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரம் போல வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.